Ads (728x90)

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தில் நடித்த மகேஷ்பாபு, அதைத் தொடர்ந்து பாரத் அனே நேனு என்ற படத்தில் தற்போது நடிக்கிறார். கொரட்டல்ல சிவா இயக்கும் இந்த படம் அதிரடியான அரசியல் கதையில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ்ராஜ் இருவரும் வில்லத்தமான அரசியல்வாதிகளாக நடிக்கிறார்கள்.

இந்த படத்தைத் தொடர்ந்து வம்சி இயக்கும் தனது 25-வது படத்தில் நடிக்கும் மகேஷ்பாபு, அதன்பிறகு ராஜமவுலி இயக்கும் படத்தில் நடிக்கிறார். ஆனால், அடுத்தபடியாக இரண்டு படங்களில் நடிக்க வேண்டியதிருப்பதால் இந்த வருடத்திற்குள் பாரத் அனே நேனு படத்தை முடிக்கிறாராம் மகேஷ்பாபு. அந்த வகையில் இப்படம் ஜனவரி மாதம் 11-ந்தேதி வெளியாகிறதாம். மேலும், ஸ்பைடர் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை என்றபோதும், இந்த அரசியல் படம் தனக்கு பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமையும் என்ற நம்பிக்கையோடு உள்ளார் மகேஷ்பாபு.

Post a Comment

Recent News

Recent Posts Widget