Ads (728x90)

நீதிமன்றத் தடையுத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் வட பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, தென்பகுதியைச்
சேர்ந்தவர்களாக  இருந்தாலும் சரி அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது ஊடகவியலாளர்களை அவர் சந்தித்தபோது அவரிடம் ஊடகவியலாளர்களினால் கேள்விகள் எழுப்பப்பட்டன. 

இதன்போது தெற்கில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரைக் கைது செய்கின்றபோதும் வடக்கில் அவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் ஏன் கைது செய்யப்படுவதில்லையென ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த பொலிஸ் மா அதிபர் தெரிவிக்கையில்;
வடக்கிற்கு ஒரு சட்டம், தெற்கிற்கு ஒரு சட்டமென்று இரண்டு சட்டங்கள் கிடையாது. எந்தப் பகுதியானாலும் சட்டம் ஒன்றே. இதனால் தெற்கில் உள்ளவர்களுக்கு என்ன சட்டம் இருக்கின்றதோ அதே சட்டம் சிவாஜிலிங்கம் போன்றோருக்கும் செயற்படுத்தப்படுமெனத்  தெரிவித்தார். 

Post a Comment

Recent News

Recent Posts Widget