Ads (728x90)

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவிடம் முதல் இடத்தை இழந்தது.

தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் பார்ல் நகரில் நடந்தது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி, 104 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. வங்க தேசத்துக்கு எதிரான போட்டியில் வென்றதன் மூலம் ஒருநாள் போட்டிக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இடத்துக்கு முன்னேறியது.

அந்த அணி தற்போது 52 போட்டிகள் மூலம் 6,244 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதுவரை முதல் இடத்தில் இருந்த இந்திய அணி, தற்போது 50 போட்டிகளில் பெற்ற 5,993 புள்ளிகள் மூலம் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது

Post a Comment

Recent News

Recent Posts Widget