இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஆடும் நியூஸிலாந்து அணியில் டோட் ஆஸ்லேவுக்கு பதில் இஷ் சோதி சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்கு கிறது. இத்தொடரில் ஆடும் நியூஸிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த டாட் ஆஸ்லே, கடந்த செவ்வாய்கிழமை நடந்த பயிற்சி ஆட்டத்தின்போது காயமடைந்தார்.
இதனால் அவர் நியூஸிலாந்து அணியில் இருந்து விலகினார். இந் நிலையில் ஆஸ்லேவுக்கு பதிலாக லெக் ஸ்பின்னரான இஷ் சோதி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இஷ் சோதி, 18 ஒருநாள் போட்டிகளில் 19 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
Post a Comment