பிரபாஸும், அனுஷ்காவும் நிஜமாகவே காதலர்கள் என்று ஏன் கூறப்படுகிறது தெரியுமா?
பாகுபலி, பாகுபலி 2 படங்களில் நடித்த போது அனுஷ்கா, பிரபாஸ் இடையே காதல் ஏற்பட்டது என்று கூறப்பட்டது. இதையடுத்து பிரபாஸ் தன்னுடைய சாஹோ படத்தில் அனுஷ்காவை ஹீரோயினாக்குமாறு பரிந்துரைத்தார்.
இந்த காரணத்தால் அந்த சந்தேகம் வலுத்தது.
பிரபாஸ்.
அனுஷ்காவுடனான காதல் பற்றி கேட்டால் நைசாக நழுவி வந்தார் பிரபாஸ். பின்னர் அனுஷ்கா தனக்கு தோழி மட்டுமே என்று கூறினார். 9 ஆண்டுகளாக அனுஷ்கா தனது குடும்ப நண்பராக இருப்பதாக கூறினார் பிரபாஸ்.
அனுஷ்கா
பிரபாஸ் கூறிய விளக்கத்தை நம்ப ரசிகர்கள் யாரும் தயாராக இல்லை. நல்ல நண்பர் என்று சினிமா பிரபலம் கூறினாலே அது காதல், திருமணத்தில் தானே முடிந்துள்ளது என்கிறார்கள் ரசிகர்கள்.
படங்கள்
படங்கள்
அனுஷ்காவும், பிரபாஸும் சேர்ந்து மிர்ச்சி, பில்லா, பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளனர். திரையில் தெரிந்த கெமிஸ்ட்ரியை பார்த்து தான் காதல் வதந்தி கிளம்பி இன்னும் அடங்கவில்லை.
கெமிஸ்ட்ரி
கெமிஸ்ட்ரி
பாகுபலி 2 படத்தில் அனுஷ்கா, பிரபாஸுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி, படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் அவர்களிடையே இருந்த நெருக்கம் அவர்களுக்கு இடையேயான காதல் வதந்தியை உண்மை என்று ரசிகர்களை நம்ப வைத்துள்ளது
திருமணம்
எங்களுக்கு இடையே காதல் இல்லை என்று பிரபாஸும், அனுஷ்காவும் சேர்ந்து பிரஸ் மீட் வைத்து தெரிவித்தாலும் கூட அதை ரசிகர்கள் நம்ப மாட்டார்கள் போன்று.

Post a Comment