
லிவ் இன் ரிலேசன்ஷிப்
மூத்த நடிகர் சரத்பாபுவும், நடிகை நமீதாவும் கடந்த சில வருடங்களாக லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் ஒன்றாக வாழ்வதாகவும் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
கேவலமான சந்தேகம்
சரத்பாபுவிற்கும் நமீதாவுக்கும் விரைவில் திருமணம் எனும் இந்தச் செய்தி குறித்து நமீதா தரப்பில் மறுப்பு அளிக்கப்படாமல் இருந்தது. பத்திரிகையாளர்கள் தொடர்புகொண்டு கேட்டதற்கு, 'ஏன் உங்களுக்கு இப்படிப்பட்ட கேவலமான சந்தேகங்கள் எல்லாம் வருகிறது?' எனக் கேட்டாராம்.
வதந்தி தொடர்கிறது
இதுகுறித்து நடிகர் சரத்பாபு, 'கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் அவருடன் படத்தில் நடிக்கத் தொடங்கியதிலிருந்தே இந்த வதந்திகள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கின்றன. இது எனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது' என்று கோபமாகப் பேசியுள்ளார்.
ரெண்டு வருசமாச்சு '
நமீதாவை நான் பார்த்தே ரெண்டு வருசமாச்சு. அவருடன் இனிமேலும் இணைத்துப் பேசுவது இருவரையும் பாதிக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்' எனக் கூறியிருக்கிறார் சரத்பாபு.
Post a Comment