Ads (728x90)

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அக்., 30ம் தேதி போயஸ் கார்டனில் துவங்க உள்ளதாக, விசாரணை கமிஷன் தலைவர் ஆறுமுகசாமி கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷனுக்கு சென்னை எழிலகத்தில் உள்ள கலசா மஹால், முதல் தளத்தில் அறை ஒதுக்கப்பட்டு உள்ளது.அங்கு ஒலி புகாத அறை அமைக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால், விசாரணை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பணிகள் முடிந்ததை தொடர்ந்து, விசாரணை கமிஷன் அலுவுலகத்திற்கு வந்து நீதிபதி ஆறுமுகசாமி பொறுப்பேற்றார்.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆறுமுகசாமி கூறியதாவது: அக்.,30 முதல் தான் விசாரணையை துவக்க உள்ளேன். போயஸ்கார்டனில் இருந்து விசாரணை துவங்கும். விசாரணை வெளிப்படை தன்மையுடன் இருக்கும். மீடியாக்கள் ஒத்துழைத்தால் உரிய காலத்திற்குள் விசாரணையை துவக்க முடியும் எனக்கூறினார்.

தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அரசு ஒருநபர் கமிஷனை அமைத்துள்ளது. அதன் ஆணைய தலைவராக நான் செயல்படுகிறேன். எனக்கு அரசு குறிப்பிட்ட கால அளவு ஒதுக்கியுள்ளது. அதற்கும் விசாரணையை முடிக்க உள்ளேன். ஜெயலலிதா மரணம் குறித்த தகவல் அளிப்பவர்கள் தம்மிடம் நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமோ அளிக்கலாம். நவம்பர் 22க்குள் தகவல்களை அளிக்கலாம். விசாரணை வெளிப்படை தன்மையுடன் இருக்கும் எனக்கூறியுள்ளார்

Post a Comment

Recent News

Recent Posts Widget