
அப்போது குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் ராகுலிடம் 2 கேள்விகள் கேட்டார். விஜேந்தர் பேசுகையில், மக்கள் எப்போதும் கேட்கும் பழைய கேள்வி தான். ராகுல் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார்? இதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். ஒருவேளை பிரதமர் ஆன பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்துள்ளீர்களா என்றார்.
இதற்கு பதிலளித்த ராகுல், அது எப்போது நடக்க வேண்டுமோ அப்பொழுது நடக்கும். நான் விதியை நம்புகிறவன் என கூறிவிட்டு, சிரித்தபடி நகர்ந்து விட்டார். முன்னதாக பேசிய ராகுல், ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் ஜிஎஸ்டி அமல் இரண்டும் மக்களின் மார்பில் செலுத்தப்பட்ட இரண்டு குண்டுகள். அனைத்து பணமும் கருப்பு பணம் அல்ல என தெரிவித்தார்.
Post a Comment