Ads (728x90)

ஐ.நா. சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) புதிய தலைமை இயக்குநராக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் கலாச்சாரத் துறை அமைச்சர் ஆத்ரே அஜூலே (45)தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

யுனெஸ்கோவுக்கான புதிய இயக்குநரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது. இதில் கடும் போட்டிக்கு நடுவே ஆத்ரே அஜூலே 30 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக யுனெஸ்கோ வாரியம் தெரிவித்துள்ளது. இவரை எதிர்த்து போட்டியிட்ட கத்தார் நாட்டு வேட்பாளர் ஹமாத் பின் அப்துல் அஜிஸ் அல்-கவாரி 2 வாக்குகள் வித்தியாசத்தில் (28) தோல்வி அடைந்தார்.

அஜூலே கூறும்போது, “இந்த இக்கட்டான சூழ்நிலையில் முன் எப்போதும் இல்லாத வகையில் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டி உள்ளது. எனவே இந்த அமைப்பை மறுசீரமைக்க அனைவரும் ஆதரவு தர வேண்டும். எந்த நாடும் வெளியேற கூடாது” என்றார்.

கடந்த 2009-ம் ஆண்டு பல்கேரியா நாட்டைச் சேர்ந்த இரினா பொகோவா யுனெஸ்கோவின் இயக்குநராக பொறுப்பேற்றார். இவரது 8 ஆண்டு பதவி காலத்தில் இந்த அமைப்பு கடும் நிதி நெருக்கடியை சந்தித்தது. மேலும் பாலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்த்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இது இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என குற்றம் சாட்டிய அமெரிக்கா, யுனெஸ்கோவில் இருந்து வெளியேறப் போவதாக எச்சரித்தது. இதனால் இந்த அமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்த நிலையில் தேர்தல் முடிவு வெளியாகி உள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget