Ads (728x90)

2014-15 தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த போது ஒருநாள் போட்டி ஒன்றில் தனக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இடையே ஏற்பட்ட சிறு உரசல் என்னவென்பதை டேவிட் வார்னர் தற்போது வெளியிட்டுள்ளார்.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் முத்தரப்பு ஒருநாள் தொடரின் போது 2-வது போட்டியில் ரோஹித் சர்மாவுக்கும் டேவிட் வார்னருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது நடந்தது என்ன என்பது பற்றி டேவிட் வார்னர் கூறும்போது, “நான் ரோஹித்திடம் ஒன்றைக் கூறச் சென்ற போது, அவர் அவர்கள் மொழியில் ஏதோவொன்றைக் கூறினார். அப்போது நான் ‘ஆங்கிலத்தில் பேசு’ என்றும் எனக்குப் புரிய வேண்டும் என்று நினைத்தால் ஆங்கிலத்தில் சொல், எனக்கு இந்தி தெரியாது, என்றேன்.

எனவே நான் மிகவும் அமைதியான முறையில் அவரிடம் இந்த கோரிக்கையை வைத்தேன், அவரும் ஆங்கிலத்தில் தான் இந்தியில் கூறியது என்ன என்பதைக் கூறினார், ஆனால் அவர் கூறியதை நான் கூற விரும்பவில்லை.

இங்கு நான் சரியாகவே நடந்து கொண்டதாக உணர்கிறேன். ஏனெனில் வேற்று மொழியில் அவர் கூறியதை ஆங்கில மொழியில் கூறி அது உலகிற்குத் தெரியவந்தால் அவர் தண்டிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனை நான் ஆங்கிலத்தில் தெரிவித்தாலும் என் உதட்டசைவை வைத்து நீங்கள் அந்த வார்த்தையைக் கண்டுபிடித்தாலும் பிரச்சினை எனக்கு ஏற்படும்” என்று ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவில் வார்னர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

“அன்று நடந்தது எனக்கு ஏமாற்றமாகவே இருந்தது. நான் அதனை எப்படிக் கூறினேனோ அதே வழியில் அனைவருமே அதனைப் புரிந்து கொண்டனர், அந்த வார்த்தையில் நிறவெறி இல்லை. அவர் என்னிடம் ஆங்கிலத்தில் சொன்னால்தான் அனைவரும் அவர் என்ன கூறினார் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும் என்று நான் வலியுறுத்தினேன்” என்றார்.

அன்றைய போட்டியில் கிரிக்கெட்டின் எழுதப்படாத விதி ஒன்றை ரோஹித் சர்மா மீறினார், வார்னர் வீசிய த்ரோவைத் திருப்பி விட்டு அதன் மூலம் ஒரு கூடுதல் ரன்னை எடுத்தார் உடனடியாக வார்னர், ரோஹித் சர்மாவை அணுகி ஏதோ கூற ரோஹித் அதற்குப் பதில் கூற சர்ச்சை கிளம்பியது. வார்னரின் ஆட்டத்தொகையில் பாதி அபராதமாக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Post a Comment

Recent News

Recent Posts Widget