
கே.பாலசந்தர் இயக்கிய மன்மதலீலை படத்தில் கமலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் ஜெயப்பிரதா. அதையடுத்து தெலுங்கு, இந்தி என்று பிசியாகி விட்ட அவர் மீண்டும் கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல்-ரஜினி இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் மற்றும் ஏழைஜாதி ஆகிய படங்களில் நடித்தவர், நீண்ட இடைவேளைக்குப்பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் பத்து வேடங்களில் நடித்த தசாவதாரம் படத்தில் ஒரு கமலுக்கு ஜோடியாக நடித்தார்.
மேலும், அரசியலில் பிரவேசித்த பிறகு சினிமாவில் ஆர்வத்தை குறைத்திருந்த ஜெயப்பிரதா, தற்போது மீண்டும் கவனத்தை அதிகப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில், தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள யாகம் என்ற படத்தில் நெப்போலியனுக்கு ஜோடியாக நடித்துள்ள ஜெயப்பிரதா, தற்போது சுவர்ண சுந்தரி என்ற தெலுங்கு படத்தில் லீடு ரோலில் நடித்து வருகிறார்.
Post a Comment