
சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் ஹிருத்திக் ரோஷன், பர்ஹான் அக்தர், அமிதாப்பசன் உள்ளிட்ட பலர் பாராட்டி தள்ளியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சரித்திர கதை மன்னன் எஸ்.எஸ்.ராஜமவுலி "இந்த டிரைலர் என்னை பித்து பிடிக்க வைத்திருக்கிறது" என்ற பாராட்டித் தள்ளியிருக்கிறார்.
பாஜிராவ் மஸ்தானி படத்தின் மூலம் பெரிய சரித்திர தாக்கத்தை ஏற்படுத்திய சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி உள்ள இந்தப் படத்தில் ராணி பத்மாவதியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். முகலாய மன்னர் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங் நடிக்கிறார். இவர்கள் தவிர சாகித் கபூர், அதிதிராவ், ஜிம் சர்ப் உள்பட பலர் நடித்துள்ளனர். சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். சஞ்சித் பஹாரா பின்னணி இசை அமைத்துள்ளார். இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி பாடல்கள் எழுதி இசை அமைத்துள்ளார். தயாரிப்பாளரும் அவரே. வருகிற டிசம்பர் 1ந் தேதி வெளிவருகிறது.
Post a Comment