Ads (728x90)

வெள்­ளப்­பெ­ருக்­கினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இன்னும் நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­ப­ட­வில்லை. மக்­க­ளுக்கு சேவை செய்ய முடி­யு­மானால் அரச ஊழி­யர்கள் பத­வியில் இருங்கள். இல்­லையேல் உடனே ஜனா­தி­ப­தி­யிடம் இரா­ஜி­னாமா கடிதம் வழங்கி விலகிச்செல்­லுங்கள்.

வேறு தரப்­பி­னரை பணிக்கு அமர்த்தி எமது செயற்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­கின்றோம். நவம்பர் மாதத்­திற்குள் அனைத்து நஷ்­ட­ஈ­டு­களும் வழங்­கப்­பட வேண்டும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

அரச ஊழி­யர்­களின் அச­மந்த போக்­கினால் ஹெலி­கொப்­டரில் இருந்தே பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நஷ்ட ஈட்டு பணத்தை மேலி­ருந்து வீச வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அத்­துடன் இந்த கலந்­தாய்வின் போது இலங்கை வங்கி மற்றும் மத்­திய வங்கி தலை­வர்கள் வருகை தரா­மை­யினால் அதி­ருப்­தி­ய­டைந்த பிர­தமர், அவர்­களை தன்னை வந்து சந்­திக்­கு­மாறும் உத்­த­ர­விட்டார்.

மாத்­தறை, மொர­வக பகு­தியில் வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நிவா­ரண உதவி வழங்கல் செயற்­திட்­டத்தின் தற்­போ­தைய நில­வரம் குறித்து அரச ஊழி­யர்­க­ளு­ட­னான கலந்­தாய்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில், வெள்ள அனர்த்தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உரிய நிவா­ரண உத­வி­களை அர­சாங்கம் வழங்­கு­வதில் பின்­நிற்­க­வில்லை. அனர்த்­தத்தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தற்கு அர­சாங்­கத்­தினால் உரிய நிதி உதவி  ஏற்­க­னவே வழங்­கப்­பட்­டுள்­ளன. அதே­போன்று பாதிக்­கப்­பட்ட சிறு தொழில் முயற்­சி­யா­ளர்­க­ளுக்­கான அர­சாங்­கத்தின் கடன் திட்­டத்­திற்­கான நிதி ஒதுக்­கீ­டு­களும் செய்­யப்­பட்­டுள்­ளன.

எனினும் அர­சாங்­கத்தின் ஒதுக்­கீ­டுகள் உரிய முறையில் மக்­களை சென்­ற­டை­ய­வில்லை. அனர்த்த நிவா­ரணம் உரிய முறையில் சென்­ற­டை­யாமல் இருப்­ப­தற்கு அரச ஊழி­யர்­களே பிர­தான கார­ண­மாகும். மக்­க­ளுக்கு சேவை செய்­வ­தற்கே அரச ஊழி­யர்கள் உள்­ளனர். எனவே உங்­களால் மக்­க­ளுக்கு சேவை செய்ய முடி­யு­மாயின் பத­வியில் இருங்கள். இல்­லையேல் உடனே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு இரா­ஜி­னாமாக் கடி­தத்தை வழங்கி செல்­லுங்கள்.

உங்­களால் முடி­யா­விட்டால் வேறு தரப்­பி­னரை பணிக்கு அமர்த்தி எங்­களால் செய்ய முடியும். அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தவே அரச ஊழி­யர்கள் உள்­ளனர்.  அரச ஊழி­யர்­களின் அச­மந்த போக்­கினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நஷ்­ட­ஈட்டு பணத்தை ஹெலி­கொப்டர் மூலம் மேல் இருந்து வீச வேண்­டி­யுள்­ளது. எனவே அரச ஊழி­யர்­க­ளுக்கு நவம்பர் மாதம் வரையும் காலக்­கெடு வழங்­கு­கின்றேன் என்றார்.

இதன்­போது அரச ஊழி­யர்கள் தமக்­குள்ள குறை­பா­டு­களை விப­ரித்­தனர். குறிப்­பாக மத்­திய அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு மாகாண அரசு தடை­யாக உள்­ளது என்­றனர். இதற்கு பதி­ல­ளித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, மத்­திய அர­சாங்­கத்தின் செயற்­திட்­டங்­களை மாகாண அரசு கட்­டாயம் அமுல்­ப­டுத்தி தீர வேண்டும். எனவே இது குறித்து தென் மாகா­ணத்தின் ஆளு­ந­ருடன் நான் பேசு­கின்றேன் என்றார்.

இத­னை­ய­டுத்து சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான கடன் தொடர்பான பிரச்சினை குறித்து பிரதமர் அவதானம் செலுத்தினார். இதன்போது இலங்கை வங்கி மற்றும் மத்திய வங்கி தலைவர்கள் வருகை தரவில்லையா? என கேட்ட நேரம் அவர்கள் அவையில் இருக்கவில்லை. இதன்போது இரு வங்கிகளின் தலைவர்களையும் தன்னை வந்து சந்திக்குமாறும் உத்தரவிட்டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget