Ads (728x90)

ஹிந்து பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் காதலித்து, அவர்களை இஸ்லாத்துக்கு மதம் மாற்றும் முயற்சி நடப்பதாக, ஹிந்து அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன; இதை, 'லவ் ஜிகாத்' என, கூறுகின்றன.

கேரளாவைச் சேர்ந்தவர் ஸ்ருதி. இவரும், அதே மாநிலத்தைச் சேர்ந்த, அனீஸ் ஹமீதும், காதலித்து வந்தனர். இந்நிலையில், ஸ்ருதி, இஸ்லாத்துக்கு மதம் மாறி, அனீசை திருமணம் செய்தார்; ஆனால், ஸ்ருதியை கடத்திச் சென்று, அவரை வலுக்கட்டாயமாக மதம் மாற்றி, திருமணம் செய்து கொண்டதாக, அனீஸ் மீது, ஸ்ருதியின் பெற்றோர், போலீசில் புகார் செய்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை, கேரள உயர் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின் போது, ஸ்ருதியும், அனீசும், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். அப்போது, ஸ்ருதி, ''மதம் மாற, என்னை யாரும் வற்புறுத்தவில்லை. அனீசை திருமணம் செய்து கொள்ளவே, மதம் மாறினேன்,'' என்றார்.

இதையடுத்து, கணவனுடன் செல்ல, ஸ்ருதியை அனுமதித்து, நீதிபதி கூறுகையில், 'கலப்பு திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும். அனைத்து கலப்பு திருமணங்களையும், லவ் ஜிகாத் என, கூற முடியாது. 'ஏனெனில், காதலுக்கு, ஜாதி, மதம் என எதுவும், தடையாக இருக்க முடியாது' என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget