Ads (728x90)

ஸ்பெயின் கட்டுப்பாட்டில் உள்ள கேட்டலோனியா, தனி நாடாக தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது. ஸ்பெயினின் பொருளாதார வளம் ெகாண்ட முக்கிய மாகாணம் கேட்டலோனியா. இது, தனி நாடாளுமன்றத்துடன் செயல்படும் தன்னாட்சி அதிகாரம் கொண்டது. ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனி நாடாக கோரி அம்மாகாண மக்கள் போராடி வருகின்றனர்.

இது தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பை ஸ்பெயின் அரசு முறியடித்தது. ஆனாலும், தனி நாடாக பிரிய கேட்டலோனியா அரசியல் தலைவர்கள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர்.

கேட்டலோனியாவிடம் இருந்து தன்னாட்சி அதிகாரத்தை பறித்து, தங்களின் நேரடி அதிகார கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ஸ்பெயின் அரசும் முயற்சித்து வருகிறது. இதை முறியடிக்க, கேட்டலோனியா நாடாளுமன்றத்தில் தனி நாடு மீதான தீர்மானம் நேற்று கொண்டு வரப்பட்டது. நாடாளுமன்றத்தின் ஓட்டெடுப்பு முடிவை அறிய ஏராளமான பொதுமக்கள் வெளியில் கூடியிருந்தனர்.

135 உறுப்பினர்கள் கொண்ட அவையில், 70 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். 10 பேர் எதிராக வாக்களித்தனர். ஓட்டெடுப்புக்கு முன்பாக, எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா பிரிந்து தனி நாடாகி விட்டதாக கேட்டலோனியா நாடாளுமன்றம் அறிவித்தது. இதை முறியடிப்பது குறித்து ஸ்பெயின் அரசு ஆலோசித்து வருகிறது

Post a Comment

Recent News

Recent Posts Widget