
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புதிய அரசியலமைப்பு தொடர்பில் விரிவான விளக்கம் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இல்லாதமையை அடிப்படையாக கொண்டு இவ்வாறான வேலைத்திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் புதிய அரசியலமைப்பின் செயன்முறைகள், இடைக்கால அறிக்கை, மக்களின் கருத்துக்கள் போன்ற பல்வேறு விடயதானங்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
இந்த விளக்கமளிப்பை அடிப்படையாக கொண்டு புதிய அரசியலமைப்பு தொட ர்பில் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தவும் ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருகின்றது.
இந்த கருத்தரங்கு இன்று காலை 11 மணிக்கு அலரி மாளிகையில் நடத்தப்பட வுள்ளது. இந்த கருத்தரங்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Post a Comment