
இச் சந்திப்புத் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்டார் விஜயம் தமது நாட்டுக்கு பெரும் கௌரவமாகும். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்த உதவும் என கட்டார் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை எதிர்காலத்தில் பலமாக முன்னெடுப்பது குறித்து இரு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடினர்.
மின்சாரம், சக்திவளத்துறையில் உள்ள முதலீட்டு சந்தர்ப்பங்கள் குறித்து ஜனாதிபதி கட்டார் பிரதமருக்கு எடுத்துக்கூறியுள்ளார். சர்வதேச மட்டத்திலும் அந்நாட்டில் பல்வேறு துறைகளில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு கட்டார் பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
மேலும் இவ்விஜயத்தின்போது கைச்சாத்திடப்பட்ட புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமானது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் தொழில்நுட்பத்துறை ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்த உதவும். நவீன தொழில்நுட்பத்துடன் இன்று முழு உலகமும் இணைந்துள்ள நிலையில் உலகின் அனைத்து நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண் டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன் போது வலியுறுத்தினார்.
அத்துடன் இலங்கைக்கு விஜயம் மேற் கொள்ளுமாறும் கட்டார் பிரதமருக்கு ஜனா திபதி அழைப்பு விடுத்துள்ளார்.
Post a Comment