Ads (728x90)


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்த மாணவர்கள் வெளிநாடுகளில் உயர் பதவிகளில் இருக்கின்றனர். அவர்கள் ஊடாக இந்தப் பாடசாலைக்கும் பெருமை. எமது நாட்டுக்கும் பெருமை. இப்போது கல்வி கற்கின்ற மாணவர்களும் எதிர்காலத்தில் அவ்வாறு நாட்டுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்க்கவேண்டும். இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் தேசிய தமிழ்மொழித் தின விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தெரிவித்ததாவது:இந்தப் பாடசாலையின் பழைய மாணவர்கள் 16 நாடுகளிலிருந்து இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன். இந்தக் கல்லூரியில் படித்த மாணவர்கள் வெளிநாடுகளில் பல உயர் பதவிகளில் இருக்கின்றார்கள். அவர்களால் இந்தப் பாடசாலைக்கும் பெருமை. நாட்டுக்கும் பெருமை. இங்கு கற்றுக் கொண்­டி­ருக்­கின்­ற மாணவர்களும் எதிர்காலத்தில் அவ்வாறு வரவேண்டும்.

மாணவர்களுக்கு கல்வித் துறையில் வகுப்பறையில் மட்டுமல்ல, பாடசாலையில் மட்டுமல்ல, நாட்டில் மட்­டுமல்ல இந்த உலகத்துடன்தான் போட்டியிருக்கின்றது. அதை வெற்றி கொள்ள வேண்டும். அந்தப் புதிய உலகுக்குள் நீங்கள் செல்லவேண்டும் –  என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget