Ads (728x90)

பாகிஸ்தானுடன்குடன் தற்போது நெருக்கும் காட்டும் டிரம்புக்கு, மோடி மீண்டும் கட்டிப்பிடி வைத்தியம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடியை ராகுல் டுவிட்டரில் கிண்டல் செய்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து, இந்தியாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். அதேசமயம் பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்து வந்தார். பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது மோடியும், அதிபர் டிரம்பும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து தங்களின் வாழ்த்துக்களை பரிமாறினர்.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் பாகிஸ்தானுடன் திடீர் நெருக்கம் காட்டியுள்ளார். டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில், பாக்., மற்றும் அதன் தலைவர்களுடனான உண்மையான உறவு தற்போதுதான் துவங்கியிருப்பதாகவும், அவர்களின் ஒத்துழைப்புக்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து ராகுல் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்ததாவது: ‛மோடி அவர்களே விரையுங்கள்; அதிபர் டிரம்புக்கு மீண்டும் ஒருமுறை கட்டிப்பிடி வைத்தியம் தேவைப்படுகிறது' என பதிவிட்டுள்ளார்

Post a Comment

Recent News

Recent Posts Widget