
ஆனால் முதல்முறையாக கண்ணாடி பாலத்துக்கு வருபவர்களுக்கு பயங்கர திகில் காத்திருக்கிறது. அண்மையில் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் முதல்முறையாக கண்ணாடி பாலத்துக்கு சென்றார். அவர் சில அடிகளை எடுத்து வைத்ததும் பயங்கர சத்தத்துடன் பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டன.
அதிர்ச்சியில் உறைந்த அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். கைகளை ஊன்றி பாலத்தில் ஊர்ந்தார். அவர் கை வைத்த இடத்திலும் விரிசல்கள் விரிந்து கொண்டே சென்றதால் பயத்தில் பதறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி காண்போரையும் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.
உண்மை என்னவென்றால், கண்ணாடி பாலம் வலுவாக உள்ளது. அதில் விரிசல்கள் விழுவது கிராபிக்ஸின் கைவண்ணம். இதற்காக பாலத்தில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. காலடி அதிர்வை உணர்ந்தவுடன் பாலத்தில் செயற்கையாக விரிசல்கள் தென்படுகின்றன.
அப்போது உண்மையான விரிசல் போன்று சத்தமும் எழுகிறது. இதுகுறித்து கிழக்கு தாய்ஹெங் நிர்வாகம் கூறியபோது, திகில் அனுபவத்துக்காகவே பாலத்தை இவ்வாறு வடிவமைத்திருக்கிறோம். விமர்சனங்கள் எழுந்தாலும் கிராபிக்ஸ் விரிசல்களை அகற்றமாட்டோம்” என்று தெரிவித்துள்ளது.
Post a Comment