Ads (728x90)

இந்தியாவில் ரத்த தானத்தை மிக எளிதாக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனம் புதிய வழிமுறையை உருவாக்கியுள்ளது. இது குறித்து அதன் நிறுவனர் மர்க் ஸக்கர்பெர்க் கூறுகையில்:-

இந்தியாவில் விபத்து மற்றும் முக்கிய அறுவைச்சிகிச்சைகள் போன்ற அவசரமான சூல்நிலையில் மக்கள் பேஸ்புக்கை நோக்கி வருகின்றனர். தங்களுக்கு குருதி தானமாக தருவதற்கு யாரேனும் இருக்கின்றனரா? என்றும் கேட்கின்றனர். இதற்கென பல்வேறு குழுக்களையும் உருவாக்குகின்றனர். ஒவ்வொரு வாரமும் ரத்தம் தானமாக கேட்டு பதிவுகள் இடப்படுகின்றன.

பல நாடுகளைப் போலவே இந்தியாவிலும் பாதுகாப்பாக ரத்தம் தானம் செய்ய நம்பகமான கொடையாளர்கள் குறைவு. பேஸ்புக் நெட்வொர்கில் இல்லாத கொடையாளரை கண்டறிவதும் கடினமான ஒன்றாக இருக்கும். இதனால், நாங்கள் சில தன்னார்வ அமைப்புகள், ரத்த வங்கிகள் மற்றும் கொடையாளர்களுடன் ஒருங்கிணைந்து ரத்த தானத்தை எளிதாக்கும் வழிமுறையை உருவாக்கியுள்ளோம்.

ரத்த கொடையாளர்கள் பேஸ்புக் மூலம் இதில் முன்பதிவு செய்து கொண்டால், ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும் அவசரமான சூழ்நிலையில் அருகிலுள்ள கொடையாளருக்கு தகவல் அனுப்பப்படும். இதன் மூலம் ரத்த தானத்தை எளிதாக்கலாம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget