நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் அறைக்கப்பட்டுள்ள மலையாள நடிகர் திலீப், தான் நடித்த ராம்லீலா படம் வெற்றி பெற்றுள்ள தகவலை அறிந்து ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்.நடிகை வழக்கில் திலீப் ஜூலை, 10ம் தேதி கைது செய்யப்பட்டார். பல முறை ஜாமின் கேட்டும் கிடைக்கவில்லை. அவர் சிறைக்கு செல்வதற்கு முன், ராம்லீலா என்ற படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தை பார்க்கலாமா, வேண்டாமா என்பது குறித்து கேரளாவில் கடும் விமர்சனம் எழுந்தது. அந்த நிலையில் ராம்லீலா படம், கேரளாவில், 191 தியேட்டர்களில் வெளியானது.
இதன் பிறகு படத்தின் இயக்குனர் அருண் கோபி மற்றும் தயாரிப்பாளர் தாமிச்சன் முலகுபாதம் ஆகியோர், ஆலுவா சிறைக்கு சென்று நடிகர் திலீப்பை சந்தித்தனர். அப்போது படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
கேரளாவில் உள்ள, 191 தியேட்டர்களிலும் அனைத்து காட்சிகளும், ஹவுஸ்புல்லாக செல்கிறது என்ற தகவலை அவரிடம் தெரிவித்தனர். இதை கேட்டு நடிகர் திலீப் ஆனந்த கண்ணீர் விடுத்தார்.
Post a Comment