ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விளையாட்டுத் திடலில் கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை தமிழ் தினப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் வகையிலேயே ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயம் அமையவுள்ளது.கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோரின் அழைப்பின்பேரில் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கிறார். இந்த பரிசளிப்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே , வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் ஆகியோர் உட்பட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சி மாவட்டத்திற்கும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment