அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரையும், பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தின் மருத்துவர்கள் நேற்றுச் சந்தித்துள்ளனர். அவர்களது உடல் நிலை குறித்து ஆராய்ந்தனர்.தமிழ் அரசியல் கைதிகள் மூவர் கடந்த 16 நாள்களாக அநுராதபுரம் சிறைச்சாலை யில் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் இருவர் சிறைச்சாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மூன்று அரசியல் கைதிகளையும் பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மருத்துவர்கள் சந்தித்துள்ளனர்.
Post a Comment