Ads (728x90)

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் மணிமண்டப திறப்பு விழாவில் ரஜினி, அரசியல், கமல்ஹாசன் என பல விஷயங்களை பற்றி பேசியுள்ளார்.

அவர் விழாவில் பேசியதாவது, சிவாஜி ஒரு நடிப்பு சக்கரவர்த்தி. சிவாஜி அவர்கள் நடிகர் என்பதால் மட்டும் அவருக்கு மணிமண்டபம் கட்டவில்லை. சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் புராண கதாபாத்திரங்களை நாட்டில் கடைகோடி மக்களுக்கும் நடிப்பால் கொண்டு சென்றதால் தான் அவருக்கு மணிமண்டபம்.

சிவாஜி அவர்கள் ஒரு அரசியல் பாடத்தை கற்று கொடுத்துள்ளார். அரசியலில் ஜெயிப்பதற்கு சினிமாவை தாண்டி ஒன்று வேண்டும் என்பது அவரது அரசியல் தோல்வியில் இருந்து அனைவருக்கும் ஒரு பாடம். அந்த ஒன்று என்ன என்பது மக்களுக்கு தெரியும், எனக்கு சத்தியமாக தெரியாது. ஒருவேளை கமல்ஹாசனுக்கு தெரிந்திருக்கலாம், ஆனால் அந்த ரகசியத்தை கூற மறுக்கிறார். என்னுடன் வந்தால் சொல்லித் தருகிறேன் என்று கூறிகிறார் என ரஜினி பேசியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget