Ads (728x90)

சீன நாட்டைச் சேர்ந்த 100 ஜோடிகளுக்கு கொழும்பு – நகர மண்டபப் பகுதியில் திருமணம் செய்து வைக்கப்படவுள்ளதாக, அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

 விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டாா்.

குறித்த சீன ஜோடிகளுக்கு எதிர்வரும் 17ம் திகதி இலங்கை முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த மாபெரும் திருமண நிகழ்வில் அரச தலைவா் மைத்திரிபால சிறிசேன மற்றும் தலைமை அமைச்சா் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்மூலம் இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த முடியும் எனவும் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினாா்.

Post a Comment

Recent News

Recent Posts Widget