
தென் கொரியாவுக்கான பயணத்தை மேற்கொண்டிருக்கும் அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவுக்கும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜெயிங் அவர்களுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
இச் சந்திப்பின்போதே தென்கொரிய அரச தலைவர் இதனைத் தெரிவித்ததாக அரச தலைவர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது அதில் தெரிவித்துள்ளதாவது,
இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவின் கீர்த்திமிக்க அத்தியாயம் இரு நாடுகளுக்கும் பல்வேறு நன்மைகளைக் கொண்டுவரும்.
சம அனுபவங்களைக்கொண்ட இரு நாடுகள் என்ற வகையில் இவ் உறவுகளை அனைத்து துறைகளிலும் பலப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் உள்ளது.
மீன்பிடி, நிர்மாணப்பணி ஆகிய துறைகளில் இலங்கை ஊழியர்களுக்கு கொரியாவில் உள்ள தொழில் வாய்ப்புக்கள் எதிர்காலத்தில் விவசாய மற்றும் பண்ணை வளர்ப்புத் துறையிலும் அதிகரிக்கப்படும். என்றார்.
இச் சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை புதிய பிரவேசத்துடன் பலப்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விரிவாக கலந்துரையாடியதுடன் இரு நாடுகளுக்கிடையிலான கூட்டுறவை மேம்படுத்தும் ஐந்து ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.
Post a Comment