சுனாமி இடர் தொடர்பான வதந்திகள் பரவினால் உடனடியாக 117 என்ற இலவச அவரச அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவலைப் பெற்றுக்கொள்ளுமாறு இடர்முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.வடக்கில் சில பகுதிகளில் அண்மைய நாள்களாக சுனாமி இடர் வதந்திகள் பரவி வருகின்றன.
இந்த நிலையிலேயே இடர் முகாமைத்துவப் பிரிவு இவ்வாறு தெரிவித்தது. இவ்வாறான பொய்யான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அந்தப் பிரிவினர் அறிவித்தனர்.
Post a Comment