Ads (728x90)

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் படம் தமிழ், தெலுங்கி தயாராகி வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்தபடி வெற்றிபெறவில்லை. அதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யை இயக்க, தயாராகி வருகிறார். ஆனால் மகேஷ்பாபு, அதற்கடுத்து கொரட்டல்ல சிவா இயக்கும் பாரத் அனே நேனு படத்தில் நடித்து வருபவர், அதற்கடுத்து வம்சி, ராஜமவுலி இயக்கும் படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.

இதில், பாரத் அனே நேனு படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருப்பதால் அதையடுத்து வம்சி இயக்கும் தனது 25வது படத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் நடிக்கிறார் மகேஷ்பாபு. இந்த படத்திற்கான கதாநாயகி தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தற்போது பாடல் கம்போஸிங் பணிகள் தொடங்கப்பட்டு விட்டது. இதற்காக, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், இயக்குனர் வம்சி ஆகிய இருவரும் நியூயார்க்கில் முகாமிட்டுள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget