இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வேகப் பந்து வீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ரா, தனது சொந்த மைதானமான டெல்லி பெரோஷா கோட்லாவில் நேற்று நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முதல் டி 20 ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 38 வயதான அவர் 19 வருடங்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு தனது சிறந்த பங்களிப்பை வழங்கினார். ஓய்வு பெற்ற அவருக்கு இந்திய அணி வீரர்கள் பிரியா விடை கொடுத்தனர்.இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறும்போது, “ஒரு வேகப் பந்து வீச்சாளராக 19 வருடங்கள் கிரிக்கெட் விளையாடியது பெரிய சாதனை. நான் விளையாடிய அணிகளில் புத்திசாலித்தனமாக வீரர்களில் நெஹ்ராவும் ஒருவர். எப்போதுமே அவர், இளம் வீரர்களுக்கு உதவுவதை விரும்பக்கூடியவர். ஆட்டத்தின்போது குறிப்பிட்ட சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பார். அவர் விடைபெற்று செல்வதை பார்க்க வருத்தமாகவே உள்ளது. எனினும் இது அவரது சொந்த மைதானத்தில் நிகழ்கிறது” என்றார்.
ஆட்டம் தொடங்குதற்கு முன்னதாக இந்திய அணி சார்பில் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு விராட் கோலியும், மகேந்திர சிங் தோனியும் இணைந்து நினைவுப் பரிசு வழங்கினார்கள்.
Post a Comment