Ads (728x90)

கூட்டு அர­சின் அடுத்த ஆண்­டுக்­கான வரவு- செல­வுத் திட்­டம் நாளை நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­ப­டும். ஜன­வரி மாதம் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் நடை­பெ­ற­வுள்­ள­மை­யால், தேர்­தலை இலக்கு வைத்து விலைக் குறைப்பு, சலு­கை­கள், மானி­யங்­களை உள்­ள­டக்­கி­ய­தா­க­ இந்த நிதி அறிக்கை இருக்­கும் என்று எதிர்­வு­கூ­றப்­ப­டு­ கின்­றது.

நிதி அமைச்­ச­ராக மங்­கள சம­ர­வீர நிய­மிக்­கப்­பட்­டதை அடுத்து அவர் தாக்­கல் செய்­யும் கன்னி நிதி அறிக்கை இது. கூட்டு அர­சின் நிதி அமைச்­ச­ராக இது­வரை கால­மும் வரவு – செல­வுத் திட்­டத்தை ரவி கரு­ணா­நா­யக்கவே முன்­வைத்து வந்­தார்.

பிணை­மு­றிக் குற்­றச்­சாட்­டைத் தொடர்ந்து ரவி கரு­ணா­ நா­யக்க அந்­தப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டார்.அந்த இடத்துக்கு மங்­கள சம­ர­வீர நிய­மிக்­கப்­பட்­டார்.
வரவு – செல­வுத் திட்­டத்தின் இரண்­டாம் வாசிப்பு மீதான விவா­தம் 10ஆம் திகதி தொடக்­கம் 15ஆம் திகதி வரை நடை­பெ­றும். குழு­நிலை விவா­தங்­கள் 16ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளன.

வரவு – செல­வுத் திட்­டத்­துக்­கான மூன்­றாம் வாசிப்பு மற்­றும் வாக்­கெ­டுப்பு டிசெம்­பர் மாதம் 9ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் ஜன­வரி மாதம் நடை­பெ­ற­வுள்­ள­தால், மக்­க­ளைக் கவ­ரும் நோக்­கில் அத்­தி­யா வ­சி­யப் பொருள்­க­ளின் விலைக் குறைப்பு, சலு­கை­கள், மானி­யங்­கள் என்­ப­வற்றை இந்த வரவு – செல­வுத் திட்­டத்­தில் தாரா­ள­மா­கக் காண­மு­டி­யும் என்று அவ­தா­னி­கள் கருத்­துத் தெரி­வித்­த­னர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget