சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோன, சாகித் கபூர், ரன்வீர் சிங் நடித்துள்ள பத்மாவதி படம் வருகிற டிசம்பர் 1-ம் தேதி ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் 3டி டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் பேசிய தீபிகாவிடம் சாகித், ரன்வீரை விட நீங்கள் அதிக சம்பளம் வாங்குவது குறித்து கேட்டபோது, தீபிகா கூறியதாவது...என்னுடைய சம்பளம் அதிகமாகவில்லை. ஆனால் நான் வாங்கும் சம்பளம் எனக்கு திருப்திகரமாக உள்ளது. ஆனால் அதை விட இந்தப்படத்தில் எனது போஸ்டரை முன்னிலைப்படுத்தி படத்தை உருவாக்கி வருகிறார்கள். அது இன்னும் என்னை பெருமைய அடைய செய்கிறது என்று கூறியுள்ளார்.
Post a Comment