
இவர்களை முஸ்லிம்களின் மற்ற பிரிவினர் அங்கீகரிப்பதில்லை. பாகிஸ்தான் உட்பட பல இடங்களில் அகமதியா முஸ்லிம்கள் தொந்தரவுகளை சந்திக்கின்றனர். இவர்களுக்கு மிரட்டலும் விடுக்கப்படுகிறது. அகமதியா பிரிவைச் சேர்ந்த ஆசாத் ஷா என்பவரை, சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த டாக்சி டிரைவர் கிளாஸ்கோ பகுதியில் கடந்த ஆண்டு கத்தியால் குத்தி கொலை செய்தார்.
தற்போது அகமதியா பிரிவின் தலைவர் ஹஸ்ரத் மிர்சா மஸ்ரூர் அகமதுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பினருக்கு சமூக இணைய தளங்களில் பல மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. இதையடுத்து, இங்கிலாந்தில் உள்ள அகமதி மசூதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
விமான நிலையங்களில் உள்ளது போல் மெட்டல் டிடெக்டர் சோதனை, அடையாள அட்டை சோதனை, கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் எடுத்து வரப்படுகிறதா என ஸ்கேனர் மூலம் உடைமைகள் சோதிக்கப்படுகின்றன.
Post a Comment