
பிரபல கர்நாடக இசை மேதை, பாரத ரத்னா விருது பெற்ற மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கொள்ளு பேத்தி ஐஸ்வர்யா. இவர் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி உள்ளார். டில்லி மற்றும் தாதா சாஹிப் குறும்பட விழாவில் வென்ற "ஈஷா" எனும் குறும்படம், "குறள் 146" என்ற பெயரில் படமாக உருவாகி வருகிறது.
இப்படத்தின் ஷூட்டிங் பாடல் பதிவுடன் ஆரம்பமானது. "அன்னை எத்தனை எத்தனையோ..." என்ற பாடலை ஐஸ்வர்யா பாடி அறிமுகமானார். பல படங்களில், கலை இயக்குநராக பணியாற்றிய உமா ஷங்கர் இப்படத்தின் இயக்குநர் ஆகி உள்ளார். ஐஸ்வர்யாவுடன் இணைந்து இப்பட இசை அமைப்பாளர் குரு கல்யாணும் பாடினார்.
Post a Comment