தமிழ்த் திரையுலகத்தில் முதன் முதலாக தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாயைக் கடந்த படம் 'எந்திரன்'. இந்தப் படத்தின் வசூலை சில வருடங்களாக வேறு எந்தப் படமும் முறியடிக்காமல் இருந்தது. ஆனால், இந்த வருடம் வெளிவந்த 'பாகுபலி 2' படம் 'எந்திரன்' வசூலை முறியடித்தது. இருந்தாலும் 'பாகுபலி 2' சாதனை நீண்ட நாள் நீடிக்கவில்லை. சில மாதங்களிலேயே 'மெர்சல்' படம் அந்த சாதனையைக் கடந்துவிட்டது.இருந்தாலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 'பாகுபலி 2' படம் சுமார் 120 கோடி தமிழ்நாட்டு வசூலுடன் முதலிடத்தில் உள்ளது. 'எந்திரன்' படத்தின் தமிழ்நாட்டு வசூலான 108 கோடியை முறியடித்துள்ள 'மெர்சல்' படம் தன்னுடைய மொத்த வசூல் முடிவில் 'பாகுபலி 2' வசூலை முறியடித்து முதலிடத்தைப் பிடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'மெர்சல்' படம் இரண்டு வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று வெளியாகும் படங்களும் அதற்குப் போட்டியாக இருக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. இன்னும் ஒரு வாரம் ஓடினால் கூட 'மெர்சல்' தமிழ்நாட்டில் முதலிடத்தைப் பிடித்துள்ள படம் என்ற பெருமையைப் பெற்றுவிடும்.
Post a Comment