Ads (728x90)

சென்னையில் நேற்று மாலை முதல் தொடர்ச்சியாக விடிய விடிய மழை பெய்துள்ளதால் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக மயிலாப்பூர், சைதாப்பேட்டை பகுதியே கடல் போல் காட்சியளிக்கின்றது

இந்த நிலையில் சென்னை மெரீனா கடற்கரையில் பீச் எது கடற்கரை எது என்று தெரியாத வகையில் காமராஜர் சாலை வரை ஒரே தண்ணீர் மயமாக உள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த ஏராளாமான கடைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது

கனமழை காரணமாக எப்போதும் அதிகாலையில் நடைப்பயிற்சி செய்பவர்களால் பிசியாக இருக்கும் மெரினா கடற்கரை இன்று வெறிச்சோடி கிடந்தது. காமராஜர் சாலையில் வாகன போக்குவரத்தும் மிகவும் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget