Ads (728x90)

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டு  சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் அவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை உடன்  கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு வட மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதவான் மாணி க்கவாசகர் இளஞ்செழியன் அவசர பணிப்புரையை பிறப்பித்துள்ளார்.

நேற்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்ற நீதவான், அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் மற்றும் வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் குழுவினருக்கு இடையில் இடம்பெற்ற விஷேட கூட் டத்திலேயே மேற்படி பணிப்புரையானது நீதிபதியால் பிறப்பிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்னாண்டோ, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட் சகர் செனவிரட்ண, பொலிஸ் அத்தியட்சகர் அம்பேபிட்டிய மற்றும் யாழ்.தலைமை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் ஹெமா விதாரண ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
விஷேட கூட்டம் ஆரம்பமானபோது, வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தற் போது யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள் வெட்டு கலாசாரத்தை நிறுத்தும் வகையில் விஷேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட் டுள்ளதாகவும், இரவு நேரங்களில் விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கைகள் ஆரம்பிக் கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்த கருத் துக்களை மிக அவதானமாக கவனித்துக் கொண்டிருந்த நீதவான் அவசர பணிப்புரைகளை பிறப்பித்தார்.
தொடர்ச்சியான வாள்வெட்டு சம்பவங்கள் இடம்பெறுவதானது சட்டம் ஒழுங்கிற்கு சவால் விடுகின்ற செயற்பாடாகவே காணப் படுகின் றது. இதனை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

எனவே சட்டம் ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாகவுள்ள இவ்வாள்வெட்டு கலாசாரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் பொலிஸ் திணைக்களத்தின் அனைத்து பிரிவுகளையும் பயன்படுத்தி இத்தகைய சமூக விரேத, சமூகத்தவர்களுக்கு அச்சுறுத்தலான வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபடுபவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அவசர பணிப்பு ரையை பிறப்பித்திருந்தார்.           


Post a Comment

Recent News

Recent Posts Widget