Ads (728x90)

காலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜிந்தோட்டை பகுதியில் ஏற்பட்ட அமைதி இன்மையை அடுத்து அங்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய அங்கு 200க்கும் அதிகமான பொலிஸாரும், 100க்கும் அதிகமான விசேட அதிரடிப்படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை இடம்பெற்றுள்ள ஒட்டுமொத்த சம்பவங்களின் அடிப்படையில் ஏழு பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிலைமை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், காலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிபிட்டிமோதர, மஹஹபுகல, ருக்வத்த, ஜிந்தோட்டை (கிழக்கு மற்றும் மேற்கு), பியதிகம, குருந்துவத்தை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதோடு, இது நாளை காலை 9.00 மணி வரை அமுலில் இருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget