Ads (728x90)

எலுமிச்சம் பழம் இறைவழிபாட்டில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழத்தின் பங்கு மகத்தானது.

வீடுகள், அலுவலகங்கள் இவற்றின் தலைவாசல் படியில் இரு பக்கங்களிலும் ஒரு எலுமிச்சம் பழத்தினை இரண்டு அரைவட்ட பகுதிகளாக பிளந்து, அதில் குங்குமம் தடவி வைத்துவிட வேண்டும. எவ்வித தீய எதிர்வினை சக்திகளும் உள்ளே செல்வதை தடுக்கும் சக்தி கொண்டதே குங்குமம் தடவிய எலுமிச்சம் பழம்.

எலுமிச்சம் பழம், காய்ந்த மிளகாய், படிகாரம், உத்திரசங்கு இவைகளை ஒரு கறுப்பு கம்பளி கயிற்றில் கட்டி தலைவாசல் படியின் மேல்புறத்தில் தொங்கவிட எவ்வித திருஷ்டி தோஷமும் அணுகாமல் பாதுகாக்கும். வாகனங்களில் முன்புறத்தில் பலர் பார்வையில் படும்படியாக 2, 3, 5, 7 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சம் பழங்களை வரிசையாக அமைத்து ஒரு கயிற்றில் கட்டி தொங்கவிட வேண்டும்.

இதனால் பார்வை திருஷ்டிகளை தடுக்கலாம். எலுமிச்சம் பழத்தை அரிந்து (இரு பிளமாக) குங்குமத்தில் தோய்த்து அதை இருகைகளால் சாறு பிழிந்து திருஷ்டி கழித்து போட திருஷ்டி விலகும்.

தெய்வங்களுக்கு படைக்கப்பட்ட எலுமிச்சம் பழங்களை வீடுகள், அலுவலகங்கள், வண்டி வாகனங்களில் வைத்துக் கொள்வதால் பல்வகையான திருஷ்டி மற்றும் தீய எதிர்வினை சக்திகளிடமிருந்து தற்காத்து கொள்ள முடியும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget