Ads (728x90)

இலுப்பை மரம்  முக்கிய சிவாலயங்களில் ஸ்தல விருட்சமாக உள்ளது.
இலுப்பை மரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரமாகும்.

திருவிளக்கெண்ணெய்

இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் இலுப்பைஎண்ணெய் எனப்படுகின்றது.

இந்த எண்ணெய் விளக்கெரிக்கப் பயன்படுகிறது. இதற்காகவே திருக்கோயில் சார்ந்த இடங்களில் தோட்டமாக வளர்க்கப்பெற்றது; காடுகளிலும் தானே வளர்கிறது.

இலுப்பெண்ணெய் சகல தேவர்களிற்கும், சகல தெய்வங்களுக்கும், சிவனுக்கும் பிரியமானது. ஆலயங்களில் தீபமேற்ற சிறந்தது இலுப்பை எண்ணெய்தான்.

முன்பு பெரும்பாலான சிவாலயங்களில் இதனால் தான் தீபமேற்றப்பட்டது. இலுப்பெண்ணெய்யை ஆலயங்களின் தீபம் ஏற்றுவதற்கு வழங்குவதன் மூலம் காரியங்கள் வெற்றிபெறும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

இறைவனுக்கு விளக்கேற்ற மிகவும் சிறந்த ஒரு எண்ணெயாக இது பயன்படுத்தப்படுகிறது.

ஐஸ்வர்யங்கள் பெருகும்

பிரம்ம முகூர்த்த வேளையில் பஞ்சமுகக் குத்துவிளக்கிற்கு இலுப்பை எண்ணெய் விட்டு வெள்ளைத் திரியிட்டு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் அஷ்டலட்சுமியின் ஐஸ்வர்யங்கள் யாவும் வழிபடும் குடும்பத்திற்கு கிடைக்கும்.

இதேபோல் இலுப்பை எண்ணெய் விட்டு மஞ்சள் திரியிட்டு தீபம் ஏற்றிவர குபேர அருளும் திருமண பாக்கியமும், புத்திர பாக்கியமும் உண்டாகும்.

இலுப்பை எண்ணெய் விட்டு சிவப்புத் திரியால் தீபமேற்றும் போது வறுமை, கடன், உட்பட பல்வேறு தோஷங்களும் நீங்கும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget