மெர்சல் படம் வெளியானபோது எழுந்த சர்ச்சைகளில் இருந்து தற்போது தான் மீண்டு சகஜநிலைக்கு திரும்பியிருக்கிறார் விஜய். அதேப்போல் ஸ்பைடர் படத்தின் அதிர்ச்சி தோல்வியில் இருந்து ஏ.ஆர்.முருகதாசும் மீண்டு வந்துள்ளார். துப்பாக்கி, கத்தி படங்களை அடுத்து விஜய்யின் 62 வது படத்தை இயக்குவதால் அதற்கான வேலைகளை தொடங்கி விட்டார் அவர்.விஜய்யின்-62வது படம் ஜனவரி மாதம் தொடங்கயிருக்கும் நிலையில், அந்த படத்தில் நடிக்கும் நடிகர் - நடிகைகள் மற்றும் டெக்னிசியன்களை ஒப்பந்தம் செய்யும் வேலைகளும் நடந்து வருகிறது. நாயகிகளாக ரகுல்பிரீத்சிங், சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.
அதோடு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படங்களுக்கு பெரும்பாலும் ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களே இசையமைத்து வந்துள்ள நிலையில், இந்த புதிய படத்தில் விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்துள்ள சாம்.சி.எஸ் இசையமைப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
விக்ரம் வேதா படத்திற்கு அவர் கொடுத்திருந்த பின்னணி இசை சிறப்பாக இருந்ததினால் இந்த வாய்ப்பை முருகதாஸ் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Post a Comment