அமெரிக்காவின் வாஷிங்டன் நகர் வரை சென்று தாக்கும் நவீன ஏவுகணை சோதனையில் வடகொரியா ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து புதன்கிழமை அமெரிக்க அதிகாரிகள் தரப்பில், ”வடகொரியா கண்டம்விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. வடகொரியா உருவாக்கிவரும் கேஎன்- 20 என்ற புதிய ஏவுகணை வாஷிங்டன் வரை சென்று தாக்கும் வலிமை உடையது. இந்த புதிய ஏவுகணை சோதனையானது வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஆட்சியின் பலத்தை காட்டும் வகையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஜப்பான் பிரதமராக ஷின்சோ அபே இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார்.
இந்தப் பயணத்தின்போது வடகொரியாவின் அணுசக்தி ஏவுகணை சோதனைகள் முக்கிய தலைப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜப்பானுக்கு ட்ரம்ப் சுற்றுப்பயணம் செல்வதையடுத்தே இந்த புதிய ஏவுகணை சோதனைகளை வடகொரியா ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
Post a Comment