
உலக மகளிர் இளையோருக்கான குத்துச் சண்டை போட்டிகள் அசாம் மாநிலத்திலுள்ள குவஹாத்தி நகரத்தில் நடைபெற்றன.
இதில் 48 கிலோ எடைப் பிரிவில் நீது, 51 கிலோ எடைப் பிரிவில் ஜோதி குலியா, 54 கிலோ எடைப் பிரிவில் ஷாக்சி சவுத்ரி, 57 கிலோ எடைப் பிரிவில் ஷாஷி சோப்ரா, 64 கிலோ எடைப் பிரிவில் அங்குஷிதா போரோ ஆகிய இந்திய வீராங்கனைகள் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று தங்கப் பதக்கங்களை வென்றனர்.
இதற்கு முன்னர் 81 கிலோ எடைப் பிரிவில், நேகா யாதவ் மற்றும் அனுபமா ஆகியோர் வெண்கல பதக்கங்களை வென்றிருந்தனர். இதன் மூலம் மொத்தமாக இந்தியாவுக்கு ஏழு பதக்கங்கள் கிடைத்துள்ளன.
இதுவே மகளிர் இளையோருக்கான குத்துச் சண்டை போட்டியில், இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாக கருதப்படுகிறது.
தங்கப் பதக்கம் வென்றவர்களில் ஜோதி குலியா அவரது வயதின் அடிப்படையில் அடுத்த ஆண்டு அர்ஜெண்டினாவில் நடைபெறவுள்ள இளையோருக்கான ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
Post a Comment