புகையிரதங்களில் பொதிகள் போக்கு வரத்துக்கான கட்டணத்தை 100க்கு 50 வீத மாக உயர்த்துவதற்கு புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்த புதிய கட்டண அறவீடு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.பொதிகள் போக்குவரத்துக்கான கட்டண அதிகரிப்புக்கான அமைச்சரவை அங்கீகா ரம் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பொதிகள் போக்குவரத்துக்கான கட்டணம் 2008 ஆம் ஆண்டு முதல் அதிகரிக்கப்படாத போதும், ஒன்பது வருடங்களின் பின்னரே இவ்வாறு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்களம் குறிப்பிடுகின்றது.
எவ்வாறாயினும், வணிக ரீதியிலான பொதிகள் போக்குவரத்துக்கு மாத்திரமே இந்த கட்டண அதிகரிப்பு உள்ளடங்குவ தாக என என்.ஜே. இந்திபொலகே தெரி வித்துள்ளார்.
Post a Comment