Ads (728x90)

விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு மெர்சல் படம் மிகப்பிரமாண்டமாக திரைக்கு வந்தது. இப்படத்தை ரசிகர்கள் எதிர்ப்பார்த்ததை விட பெரிய வரவேற்பு கொடுத்தனர்.

இதனால், தயாரிப்பு தரப்பு மிகவும் சந்தோஷத்தில் இருக்க, தற்போது அவர்கள் சந்தோஷத்தை சமீபத்தில் வந்த செய்தி மேலும் இரட்டிப்பாக்கியுள்ளது.

அது வேறு ஒன்றுமில்லை மெர்சல் உலகம் முழுவதும் ரூ 100 கோடி ஷேர் கிடைத்துள்ளதாம், இதற்கு முன் தமிழில் கபாலிக்கு மட்டுமே இப்படி ஒரு ஷேர் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் விஜய் தான் என்பது நிரூபனமாகியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget