Ads (728x90)

உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான எல்­லை­கள் மற்­றும் உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்கை தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு நீதி­மன்­றம் இடைக்­கா­லத் தடை உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளமை தொடர்­பில், தேர்­தல்­கள் ஆணைக்­குழு கூடி ஆரா­ய­வுள்­ளது.

இந்­தக் கூட்­டம் எதிர்­வ­ரும் சனிக்­கி­ழ­மை­யன்று இடம் பெ­ற­வுள்­ள­தாக தேர்­தல்­கள் ஆணை­யா­ளர் மகிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­தார். நீதி­மன்­றத்­தின் உத்­த­ரவு தொடர்­பில் தன்­னால் இப்­போ­தைக்கு கருத்­துக் கூற­மு­டி­யாது (நோ கமென்ட்ஸ்) என்று மட்­டுமே கூற­மு­டி­யும் என­வும் அவர் குறிப்­பிட்­டார்.

உள்­ளூ­ராட்சி சபை­க­ளின் எல்­லை­கள் மற்­றும் உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்­கையை வரை­யறை செய்து, உள்­ளூ­ராட்சி மாகாண சபை­கள் அமைச்­ச­ரி­னால் வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு டிசெம்­பர் 4 வரை இடைக்­கா­லத் தடை உத்­த­ரவு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தால் நேற்­றுப் பிறப்­பிக்­கப்­பட்­டது.
இந்த வர்த்­த­மானி அறி­வித்­த­லின் அடிப்­ப­டை­யி­லேயே உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு ஜன­வரி மாத இறு­தி­யில் தேர்­தலை நடத்த தேர்­தல்­கள் ஆணைக்­குழு நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தது.

எதிர்­வ­ரும் 27ஆம் நாள், வேட்­பு­ம­னுக்­க­ளைக் கோரும் அறி­விப்பை வெளி­யிட தேர்­தல் ஆணைக்­குழு நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்த நிலை­யில், மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம், வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு இடைக்­கால தடை விதித்­துள்­ளது. உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் அறி­விப்பு வெளி­யி­டப்­ப­டு­வது பிற்­போ­டப்­ப­டும் சூழல் எழுந்­துள்­ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget