சீனப் பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் சு ஜியன்வேய்க்கும் இலங்கைக் கடற்படைத் தளபதி சிறிமேவன் ரணசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடற்படைத் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது.சீன தேசியப் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மேஜர் ஜெனரல் ஷி ஷொன்கு உள்ளிட்ட பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றே குறித்த சந்திப்பில் ஈடுபட்டது. இச் சந்திப்பில் ஆராய்ச்சி நடவடிக்கைகள், இருதரப்பினதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தகவல் பரிமாற்றம் போன்ற பல்வேறு காரணிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சந்திப்பின் இறுதியில் இரு தரப்புக்குமிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment