Ads (728x90)

யாழ் குடாநாட்டில் இராணுவத்தினாின் பாவனையில் இருந்த பொது மக்களுக்கு சொந்தமான மேலும் ஒரு தொகுதி நிலப்பரப்பு இன்று விடுவிக்கப்பட்டது.

வலி வடக்கு வயாவிளான் வடமூலை பகுதியில் இதுவரை காலமும் படையினரின் பாவனையில் இருந்த 29 ஏக்கர் நிலப்பரப்பே விடுவிக்கப்பட்டது.

வசாவிளான் உத்தரியமாதா ஆலய முன்றலில் நடைபெற்ற நிகழ்வில் காணிகளை விடுவித்ததற்கான உறுதிச்சான்றிதளை யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சி யாழ் மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வுக்கு மேலதிக மாவட்ட காணி ஆணையாளர் எஸ்.முரளிதரன் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனா்.

உயர் பாதுகாப்பு வலயப்பகுதியில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி வயாவிளான் பகுதி மக்கள் இம் மாத முற்பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை பலாலி இராணுவ நுழைவாயிலில் மேற்கொண்டிருந்தனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget