Ads (728x90)

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் வணக்க நிகழ்வும் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.
ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் கைவேலிப்பகுதியில் அமைந்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சி தலைமைச்செயலகத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் செயலாளர் உள்ளிட்டவர்களினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து நினைவுப் பந்தலில் வைக்கப்பட்ட 200 மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடர் ஏற்றப்பட்டது.

ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கிருபாகரன், புதுக்குடியிப்பு வணிகர்சங்க தலைவர் செ.செல்வச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி, மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget