
இது தொடர்பில் சங்கம் அனுப்பி வைத்துள்ள பத்திரிகைச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது
மாணவர்களின் மூன்றாம் தவணைப் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலத்தில் ஊழியர்களின் போராட்டம் மாணவர்களின் கல்வியில் பின்னடைவை ஏற்படுத்தும். ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று போக்குவரத்துச் சேவையை உடன் ஆரம்பிக்க வழியேற்படுத்த வேண்டும்.
ஊழியர்களின் போராட்டம் தொடருமாக இருந்தால் அதிபர்கள், ஆசிரியர்களும் அவர்களுக்குத் துணையாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதோடு, பாடசாலைகள் அனைத்தும் முடங்கும் நிலை உருவாகும்.
வடமாகாணத்தில் அநேகமான மாணவர்கள் பருவகாலச் சீட்டுகளுடன் இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்துகளில் பயணம் செய்வதோடு, தூர இடங்களில் பணியாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் பலர் இத்தகைய பேருந்துச் சேவையைப் பெரிதும் பயன்படுத்துகின்றனர்.
பேருந்துச் சேவை தடைப்படுவதால் கடமைக்குச் செல்வது முடியாத காரியமாக உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் பிள்ளைகளில் நலனில் அக்கறைகொண்டு உடனடியாக போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, வடக்கு மாகாண தனியார் பேருந்துச் சங்கத்தின் கீழ் பதிவில் உள்ள 531 பேருந்துகளும் தற்போது மக்களின் சேவைக்காக களமிறக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் எஸ்.சிவபரன் தெரிவித்தார்.
“யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் தற்போது 590 சிற்றூர்திகள் பதிவில் உள்ளன. வழமையாக நாள் ஒன்றிற்கு 200 தொடக்கம் 250 சிற்றூர்திகளே சேவையில் ஈடுபடும். தற்போது 350ற்கும் மேற்பட்ட சிற்றூர்திகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளோம். இதேநேரம் சாதாரண நாள்களில் 15 நிமிடத்துக்கு ஒரு சேவை இடம்பெறுவதே வழமையாகும்.
இரு நாள்களாக இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பணிப் புறக்கணிப்பையடுத்து 10 நிமிடத்துக்கு ஓர் சேவை இடம்பெறுகின்றது” என்று யாழ். மாவட்ட கூட்டிணைக்கப்பட்ட தனியார் பேருந்துகளின் இணையத் தலைவர் பொ.கெங்காதரன் தெரிவித்தார்.
Post a Comment